தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் உழவர் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாராபுரம்- பொள்ளாச்சி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் போலீசார் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் பொள்ளாச்சி சாலை கடைவீதி பகுதியில் 1,மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உழவர் சந்தை அருகே வெளியாட்கள் கடை போடுவதை தடுக்க வலியுறுத்தி நடைபாதை சாலையில் கடை போட்டு வியாபாரம் செய்யும் வெளி ஆட்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 85.க்கும் மேற்பட்ட விவசாயிகள் விலை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம் ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போடுவதால் இவர்களின் வியாபாரம் பாதித்து வந்தது இது குறித்து விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் இன்று உழவர் சந்தை விவசாயிகள் பலர்
திடீரென தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் 80,க்கும் மேற்பட்ட உழவர் சந்தை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறிகளை விவசாயிகள் கைவிட்டனர்.
இதனால்
அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபடுவதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் வட்டாட்சியர் திரவியம் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு விவசாயிகள் வருவாய் வட்டாட்சியர் திரவியதை அழைத்துச் சென்று சாலையோர வியாபாரிகளால் உழவர் சந்தை விவசாயிகள் எவ்வாறு பாதிப்படைந்துள்ளோம் என்பதை நேரடியாக சென்று காண்பித்தனர் அதன் பிறகு
சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோர் இடத்தில் உழவர் சந்தை விவசாயிகளின் பாதிப்பு குறித்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அதை தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். பிறகு உழவர் சந்தை விவசாயிகளுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் இருந்தது அதனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கட்டுப்படுத்தினர்.