கொடைக்கானல் சன் லயன்ஸ் கிளப் மற்றும் வட்டார சட்டப் பணி குழுவினர் இணைந்து மூங்கில் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 30 பழங்குடியினரின் குடும்பத்தினருக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கொடைக்கானலில் உள்ள சன் லயன்ஸ் கிளப்பின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வட்டார சட்டப் பணிகள் குழு மற்றும் சன் லயன்ஸ் கிளப் இணைந்து மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த மூங்கில் பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் 30 பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு மூலம் பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி ஆகியவை கீழானவயல் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு நீதிபதி கிஷோர்நாத் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் பாபு ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அரிமா சங்கம் முன்னால் கவர்னரும் தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில சுற்றுச்சூழல் தலைவருமான டாக்டர் டி பி ரவீந்திரன் கலந்துகொண்டு முப்பது பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பல சரக்குகள் கம்பளி வேட்டி சேலை உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சன் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆஷா ரவீந்திரன், முன்னாள் தலைவர்கள் செந்தில்குமார், ஜெரால்டு ராஜா நிர்வாகிகள் திரவியம் சுரேஷ் பிச்சை வக்கீல் பாபு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சரவணகுமார் நிர்வாகி பிரபாகரன் உட்பட வனத்துறை மற்றும் காவல் துறையின் சார்பில் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரம் மேம்பட லெமன் கிராஸ் புல்லில்இருந்து தைலம் தயாரிப்பதற்காக ஒரு இயந்திரம் வழங்க வேண்டும் என சன் லயன்ஸ் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர் அதனை விரைவாக வாங்கி தரப்படும் என லயன்ஸ் கிளப்பின் முன்னாள் கவர்னர் டாக்டர் டி பி ரவீந்திரன் அறிவித்தார்