கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் சித்திரை திருவிழா கோலாகலம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ குமாரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது புதன்கிழமை இன்று இருநாள் திருவிழா நடைபெற உள்ளது

இந்த விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி ஆயிரம் கண் பானை அங்கப் பிரதட்சணம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப் 16 ல் நடைபெற்றது அன்று மாலை முக்கொம்பு மற்றும் கரகம் ஊர்வலமாக நகரின் பிரதான வீதிகளில் கொண்டு வரப்பட்டது.
கோவிலில் உள்ள கம்பத்தில் முக் கொம்பு கட்டப்பட்டது
முக்கொம்பிருக்கு வஸ்திரம் உடுத்தி மஞ்சள் நீர் ஊற்றி வணங்கி வருகின்றனர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடந்து வருகிறது தினமும் விதவிதமான அலங்காரங்களுடன் நகரின் பிரதான வீதிகளில் அம்மன் உலா வருகிறார் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய அங்கமாக ஏப்ரல் 29.30. நேற்றும் இன்றும் அக்னி சட்டி மாவிளக்கு ஆயிரம் கண் பானை அங்கப் பிரதட்சணம் பால்குடம் எடுத்தல் முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
இந்த விழாவில் கம்பம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மண் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள்.மேலும் பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் முளைப்பாரி ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று
வருகின்றன புதன்கிழமை இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன இந்த விழாவில் பல்வேறு அமைப்புகள் அன்னதானம் நீர் மோர் வழங்குதல் கலை நிகழ்ச்சிகள் என்று கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ. நதியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கிராம கமிட்டியினர் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்