தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
கொழுமங்குளி மற்றும் சூரிய நல்லூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குளி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கொழுமங்குளி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பற்றாளர் பிரேமா தலைமை தாங்கினார்.
ஊராட்சி செயலாளர் நவீன் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்குதல், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல், கழிப்பிட கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் குண்டடம் மேற்கு ஒன்றிய தி..மு.க விவசாய அணி அமைப்பாளர் மணிவேல்,ஒன்றிய பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அது போன்று சூரியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சமுக நலத்துறை அலுவலர் லூர்து மேரி,ஊராட்சி செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.