சில்வார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சில்வர் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் கிராம சபை கூட்டம் பார்வையாளராக ஜீலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் வீரபத்திரன் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
மேலும் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் கலைஞர் கனவு இல்லம் உள்பட கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஊராட்சி செயலாளர் வீரபத்திரன் கிராம சபை கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்து நன்றி கூறினார்