தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரத்தில் அதிமுக சார்பில் மே தினத்தை முன்னிட்டு பெயர் பலகை திறப்பு மற்றும் கொடி ஏற்று விழா
திருப்பூர்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா தாராபுரம் உடுமலை ரோடு மின்வாரிய அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பழனி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் என்கிற பழனிச்சாமி, நகரக் கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்ன மணி என்கிற மோகன்ராஜ், தாராபுரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரமேஷ்,மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பாலகுமாரன், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார்,கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் குப்புசாமி, மூலனூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜரத்தினம், பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ் குமார், வர்த்தக அணி செயலாளர் கோல்டன் ராஜன், அம்மா பேரவை பொருளாளர் அரசகுமாரன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சிதம்பரம், துணைச் செயலாளர் ரவி என்கிற ராஜ்மோகன், தாராபுரம் நகர அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து, திருப்பூர் மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் தங்கவேல் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு, மின்சார பிரிவு, ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுமை தூக்குவோர் சங்கம், பேக்கரி தொழிற்சங்கம் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.