கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக, வால்பாறை நகர திமுக, தொ.மு.ச சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்,தொமுச.வின்மாநில செயலாளர் வி.பி.வினோத்குமார், கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, என்இபிசி செயலாளர் ஷெரீப் தலைமைக்கழக பேச்சாளர் வழக்கறிஞர் மாலதி ஆகியோர் முன்னிலையில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
இவ்விழாவில் முன்னதாக 2 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஊமையாண்டி முடக்கு பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணி கவர்கல் வரை சென்று அங்கு திமுக கட்சி கொடியேற்றி வைத்து சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தலைமைக்கழக பேச்சாளர் தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை மற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு வழங்கியது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்
அதனைத்தொடர்ந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது இந்த விழாவில் முன்னாள் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், கோவை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஈ.க.பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜே.பி.ஆர்.என்ற பாஸ்கர் நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்