சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக கோவையில் துவங்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்
கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில்,பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை துவக்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக கோவை செட்டி வீதியில் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் மாம்பழம் ஜூஸ் மற்றும் கிரேப் ஜூஸ் வழங்கப்பட்டது..
கோவை மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் தலைவர் வினோத் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் k அர்ஜுனன் ,கே.ஆர். ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்…