கரூர் செய்தியாளர் மரியான் பாபு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில், தொழிலாளர் விடுதலை முன்னணி கரூர் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி இல அகரமுத்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, கரூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் துரை செந்தில், தொழிலாளர் விடுதலை முன்னணி கரூர் மாவட்ட துணை அமைப்பாளர் விஜயலட்சுமி, செல்லத்துரை, கரூர் நகர செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம், கரூர் வடக்கு நகர செயலாளர் அடங்காத்தமிழன் அருள், தாந்தோணி நகர செயலாளர் சக்திவேல், கரூர் நகர துணைச் செயலாளர் ஜவகர், கரூர் மாவட்ட பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு, டிஎன்பிஎல் ஜெயக்குமார், டேவிட், மாணவரணி செல்லத்துரை, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கார்த்தி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மணிமாறன், வடக்கு பசுவை காலனி மணி, பசுவை ஆகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க கோரி கோஷங்களை எழுப்பினர்,