திருவாரூர் அருகே தனது மகன்கள் படித்த பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாகனங்களில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சீர்வரிசையாக எடுத்து சென்று வழங்கியது கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நகர் பகுதியில் உள்ள இவிஎஸ் நகரில் வசித்து வருபவர் சித்தி விநாயகம் இவர் சொந்தமாக மர பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு சித்ரா என்கிற மனைவியும் விக்னேஸ்வரன் 14 , புகழரசன் 10 வயது ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது புகழரசன் அலிவலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் தற்போது வேறு பள்ளிக்கு செல்ல உள்ள நிலையில் இன்று பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற வந்தார் இதனை முன்னிட்டு தனது மகன்கள் இருவரும் படித்த அரசு பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நிலையில் தான் செய்து வரும் பர்னிச்சர் பொருட்களை உயர்த்தரமாக செய்து வழங்குவது என முடிவு எடுத்து ரூபாய் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 ஆசிரியர்களுக்கான டேபிள் ,5 நாற்காலி, ஐந்து புத்தக அலமாரிகள் 5 மாணவர்கள் டேபிள்,கரும்பலகைகள் , தண்ணீர் குவளைகள், குடம் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான தளவாட பொருட்களை டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கிராமத்தை தனது மகனை மேளதாளம் முழங்க பள்ளிக்கு எடுத்துச்சென்று ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தரராஜன் பங்கேற்று பொருட்களை பெற்றுக்கொண்டு மாணவரின் தந்தைக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் இது குறித்து சித்திவிநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது.

தனது இரண்டு மகன்களும் படித்த அரசு பள்ளிக்கு தனது சொந்த செலவில் பொருட்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்தபோது தனது கையால் செய்யப்பட்ட மரப் பர்னிச்சர் பொருட்களை வழங்க முடிவு எடுத்ததாகவும் மேலும் தான் பல நாட்கள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் தனது மகனை அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் விட்டு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வர செய்தனர்.

மேலும் தனது மகன் புகழரசன் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட சிறந்த முறையில் கல்வி பயில்வதாக மற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததால் மிக மகிழ்ச்சி அடைந்ததாகவும் இதனால் மிகத் தரமாக பொருட்களை செய்து என்ற வழங்கி உள்ளேன் என தெரிவித்தார் .

இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.

தனது மகன்கள் படித்த பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக வழங்கியது கிராம மக்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *