மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே. கமல்கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்
இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளி தரம் குறித்த வருடாந்திர ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது,
தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார் பள்ளி பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டிகள், இருக்கை வசதிகள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப் பான்களை அகற்றும்படியும் அறிவுறுத்தப் பட்டது. தென்காசி, ஆலங்குளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 463 பள்ளி பேருந்துகளும், தென்காசி வட்டார பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இந்த ஆய்வில் பங்கேற்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) செல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் மணி பாரதி. ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவள்ளி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.