தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் விவசாயிகளின் நடைபாதையில் உயர் கோபுரம் அமைத்து மின் கம்பிகள் கொண்டு செல்ல எதிர்ப்பு!
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள நால்ரோடு எரசனம் பாளையம் கிராமத்தில் ஜே எஸ் டபிள்யூ( jsw) தனியார் நிறுவனத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சார ஒயர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கனவே ஏராளமான உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் விவசாய நிலத்தின் அருகே விவசாயின் போக்குவரத்து நடைபாதையில் தனியார் மின் ஊழியர்கள் மூலனூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வந்த ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களிடம் மின்வாரியத்துறையினர் எந்த அனுமதியையும் பெறாமல், விவசாய நிலத்தின் போக்குவரத்து பாதைகளில் உயர் மின் கோபுரம் அமைத்து அதிக திறன் கொண்ட மின்சார ஒயர்களை எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொள்வது தவறான செயல் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தார் சாலை ஓரத்தில் விவசாயிகளின் விலை நிலங்கள் உள்ளது இங்கு விளைவிக்கும் காய்கறி மற்றும் பயிர் வகைகளை கொண்டு செல்லும் பாதையாக நொச்சிப்பாளையம் பகுதி இருந்து வருகிறது இதில் மின் கோபுரங்கள் அமைத்தால் வளைவுகளாக உள்ள சாலைகளில் வரும் வாகனங்கள் மின் கோபுரங்களில் மீது மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
மேலும் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட விவசாயிகளின் வசிப்பிடங்களுக்கு வருவதற்கு இடையூறாக இருக்கும். மேலும் உயர் மின்னலத்த கதிர்வீச்சுகள் கால்நடைகளை பாதிப்பதுடன் விவசாயிகள் லாரி மற்றும் ஈச்சர் வாகனங்களில் லோடு ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது மின்சார ஒயரில் உரசி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குடி தண்ணீர் பைப் லைன்களை உடைத்து மின்கம்பங்களை அமைத்து வருகின்றனர்
மேலும் சாலையோரத்தில் இருந்து வரும் பனை மரங்களை வெட்டி விடுகின்றனர். மேலும் வரும் காலத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியாது. இதுபோன்று பல்வேறு பாதிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்படும் எனவும் எனவே புதை வலி கேபிள் மூலம் மின் ஒயர்களை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் ஜே எஸ் டபிள்யூ அத்துமீறல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் உள்ள சமயத்தில் இது போன்று தனியார் நிறுவனம் நடந்து கொள்வது சட்டத்தை மீறிய செயலாகும் என தெரிவித்து நாங்கள் மின் ஒயர்களின் மீது அமர்ந்து போராட்டம் செய்து வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது. உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியையொட்டி, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் ஏராளமான ராட்சத இயந்திரங்கள் ஜேசிபி வாகனங்கள் போர்வெல் வாகனங்கள் ஆகியவற்றை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.