தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகர அரிமா சங்கம், வி. எஸ் என். ஆறுச்சாமி கருணை அறக்கட்டளை மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை ஆகியவை இணைத்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்.
தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற்றது. முகாமை அரிமா வி .எஸ். என்.சுஜாதா ஒருங்கிணைத்தார்.நகர அரிமா சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தூதுவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், பெரியசாமி,முன்னாள் வட்டார தலைவர் தங்கவேல்,முன்னாள் மண்டல தலைவர் ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல சிகிச்சை, காது மூக்கு தொண்டை, குடல் சிகிச்சை, மகளிர் நல சிகிச்சை, தோல் நல சிகிச்சை, கண் நலம் மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு உட்பட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
மருத்துவர்கள் பிரியதர்ஷன்,அனுஷேத்ரா ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் முகாமுக்கு வந்தவர்களுக்கு இசி.ஜி மற்றும் ரத்த சர்க்கரை பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதில் அரிமா நிர்வாகிகள் முகமது அப்துல் காதர், சீனிவாசன், ராமச்சந்திரன், விவேகானந்தன், விஷ்ணு செந்தில், பாலசுப்பிரமணி, பாலச்சந்தர், சாரதாஸ் பரத், வீர வெள்ளைச்சாமி, பசுபதி, ரத்தினசபாபதி, கோவிந்தன், மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கணேஷ், கௌதம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மற்றும் தாராபுரம் மகாராணி செவிலியர் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.முடிவில் அரிமா சங்க நிர்வாகி சீனிவாசன் நன்றி கூறினார்.