திருவெற்றியூர்.
நீராதாரத்தை பெருக்கவும் நீர்நிலைகளை காப்பாற்றவும் தன்னார்வலர்கள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குழு இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கார் நகர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் குளம் அமைந்துள்ளது இந்த குளம் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து எந்த நேரமும் நீர் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும் இந்த குளத்தில் ஆகாயத்தாமரை தேவையில்லாத குப்பைகள் சேர்ந்து மிகுந்த நீர்நிலைகளை மாசுபடுத்தும் இடமாக கருதப்பட்டு வந்த நிலையில் இந்த குளத்தை சீரமைக்கும் பணியில் நீர் நிலை பாதுகாப்பு குழு சார்ந்த கார்த்திக், ஆறுமுகம், சீனிவாசன், ஆகியவரது ஏற்பாட்டின் பேரில் தன்னார்வலர்கள் குலத்தின் அருகே உள்ள குப்பைகளையும், புதர்களையும் அகற்றினர்.
இதில் அந்த பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் நீர் நிலையை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். ஆறாவது வட்டத்தில் உள்ள அம்பேத்கார் நகர் குலத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சேகர், ராஜேஷ், மஞ்சுளா, ஆறுமுகம், தனலட்சுமி, பாலு, சுரேஷ், கமல், சண்முகம், கமலக்கண்ணன், அருண்குமார் பலர் கலந்து கொண்டு குளத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.