மூல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், கொட்டக்குடி ஆற்றின் நீர், வருஷ நாடு மூல வைகை ஆற்று நீர் என்று வரும் அனைத்து நீரும் குன்னூர் பாலம் வழியாக வைகை அணையில் சேர்கிறது.
ஆற்று நீருடன் சேர்ந்து வரும் பிளாஸ்டிக் கழிவு கள், தண்ணீர் பாட்டில்கள், துணிகள், பாலிதீன் பொருட்கள் உள்ளிட்ட சுகாதாரமற்ற பொருட்கள் குன்னூர் பாலம் அருகே தேங்கி மாசடைந்து வந்தது . குடிநீர் மாசுபடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
இதனை தேனி மாவட்ட நல்லோர் வட்டகுழு மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சி மணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், என்.எஸ். எஸ்.மாணவர்கள் ஆற்றில் கிடந்த சுகாதாரமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.இது குறித்து
சமூக ஆர்வலர்கள் கூறும்போது தினதோறும் சாக்கடை கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், முல்லை பெரியார் மூல வைகை ஆறு கொட்டங்குடியாறு உள்ளிட்ட ஆறுகளில் வந்து சேர்கிறது. வருடந் தோறும் நடைபெறும் வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் அம்மன் சித்திரை த் திருவிழா நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் பாலிதீன் பொருட்கள் மற்றும் துணிகளை ஆற்றில் போடு வதை தவிர்க்க வேண்டும். குன்னூர் ஆற்றில் பாலத்தில் இருந்து பலரும் கழிவு பொருட்களை ஆற்றில் கொட்டுகின்றனர்.
இதனால் வைகை ஆறு மாசடைந்து பாலாகிறது இதனை தமிழக நீர்வள ஆதாரத்துறையினர் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர் .