தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பூங்காக்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது
அதுபோல விளையாட்டு அரங்கம் மகளிர் பூங்கா உள்ளிட்டவைகள் தமிழக முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இந்த நிலையில் பானள ரோட்டில் ஐந்து வகை பூங்காக்கள் இருந்து வந்தது இதில் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாத அறிவியல் பூங்கா இருந்து வந்தது இதனை அடுத்து இந்த பூங்காவை மாற்றி என்ன செய்யலாம் என்று மக்களின் பயன்பாட்டுக்கு எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் ஆலோசனை செய்து விளையாட்டு மைதானம் அமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
இந்த இடத்தில் நான்கு வகை விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது வாலிபால் பூப்பந்து கால்பந்து மற்றும் டப் கோட் விளையாட்டு இந்த விளையாட்டு வசதி படைத்த பணக்காரர்கள் மட்டும்தான் விளையாட முடியும் தூத்துக்குடியில் தனியார் நபர் ஒருவர் இந்த விளையாட்டு மைதான அமைத்துள்ளார்
இதில் விளையாடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு நான்காயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது இது முழுக்க முழுக்க வசதி படைத்த பணக்காரர்கள் மட்டும்தான் விளையாட முடியும் இந்த விளையாட்டு மைதானம் புல் தரை மைதானம் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது
இதில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுவதால் ஒரு ரூபாய் கட்டணம் கூட வசூலிக்கப்படாமல் பொதுமக்கள் விளையாடுவதற்காக இலவசமாகவே இந்த மைதானம் அமைக்கப்படுகிறது டப் கோட் மைதானம் பணக்காரர்கள் மட்டும் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்த இந்த மைதானம் தற்போது தூத்துக்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இலவசமாக விளையாடுவதற்கு மாநகராட்சி முழுக்க முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
இது தமிழகம் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான பணிகளை பார்வையிட்டு வருகின்றனர் இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் இன்று பார்வையிட்டு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது
விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறினார் மேயர் ஜெகன் கூறுகையில் ஒரு காலத்தில் தற்போது வரை பணக்காரர்கள் மட்டும் விளையாடக்கூடிய டப் கோட் விளையாட்டு மாநகர மக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுகிறது இந்த மாத இறுதிக்குள் இந்த இடத்தில் நான்கு வகையான விளையாட்டுகள் விளையாடுவதற்கு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது
இந்த மாத இறுதியில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார் மேலும் கூறுகையில் இலவசமாகத் தான் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு இது அமைக்கப்படுகிறது தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் பெயரில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது இது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வரும் பொழுது மாநகர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று மேயர் ஜெகன் கூறினார் உண்மையில் பணக்காரர்கள் வசதி படைத்தவர்கள் மட்டும் விளையாடக்கூடிய விளையாட்டு மைதானம் தற்போது மாநகராட்சி சார்பில் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்படுவது மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும்போது தமிழக அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் பெரிதும் நன்றி தெரிவிப்பார்கள் என்று தெரிய வருகிறது