செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40 ) அவரது மகள் ஜர்ஷிதா (வயது 17) இவர் பாடியநல்லூர் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கத்தார் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சிலம்பம் சாம்பியன் என்ற பட்டத்தையும் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களையும் வென்று குவித்தார்.
இளம் வயதில் சாதனை புரிந்து தமிழகம் வந்த மாணவியை கௌரவப்படுத்தும் விதத்தில் கல்லூரியின் தலைவரும் , வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவருமான ராமச்சந்திரன் , கல்லூரிக்கு பெருமை சேர்த்த அந்த மாணவியை அழைத்து பாராட்டி நினைவுப்பலகை, மற்றும் பரிசுத்தொகை அளித்து வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் துணைவேந்தர் டாக்டர் . நாராயண பாபு, முதல்வர் டாக்டர் . பரத் , டாக்டர். தீனன் மேலாண்மை இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா , கல்லூரியின் டீன்கள் , நர்சிங், பிஸியோதெரபி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.