திருவாரூர் செய்தியாளர் செந்தில்
புகழ்பெற்ற வீழி நாதர் திருக்கோவிலில் மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படும் திருவீழிநாதர் ரிஷப வாகனத்தில் நான்கு வீதிகளிலும் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திரு வீழி மிழலையில் அமைந்துள்ளது மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படும் திருவீழிநாதர் சாமி திருக்கோவில். திருக்கோவிலில் சித்திரை மாத பெருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக வெகு விமர்சையாக நடைபெற்று இறுதியாக தேரோட்டம் நடைபெறும்
அதன்படி திருவீழிநாதர் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்..