பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயல் அலுவலர் முருகேசன் ,சோழர் வரலாற்று சங்கத் தலைவர் செல்வராஜ், மருத்துவர்கள் ஜெகநாத்கார்த்திக் ஈஸ்வர், ஓவியா
ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
முகாமில் சர்க்கரை நோய், மன அழுத்தம், பல், கண் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை முகாம் நடைப்பெற்று பொதுமக்கள் பலர் பயனடைந்தனர்.
இம்முகாமில் கல்லூரி பேராசிரியர் முருகவேனி, எழிலரசி, இலக்கியா, ரூபிலா, வித்யா,சரண்யா, குணேஷ்வரி, ஜமிர்பாட்சா,மணிவண்ணன், மருத்துவ ஊழியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.