துறையூர்
திருச்சி மாவட்டம்,துறையூர் அருகே உள்ள தா.பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,கலை திருவிழாவில் மாநில அளவில் கலந்து கொண்டவர்களுக்கும், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும் பாராட்டு விழா மற்றும் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ,மாநில
ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன்
தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்.இதில் மாவட்ட செயலாளர் கா.உதுமான்அலி,
மாநில சட்ட ஆலோசகர் மு.நேதாஜி,மாவட்ட மகளிரணி தலைவி பா.ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கா.கனகராசு,தா.பேட்டை வட்டார கல்வி அலுவலர் க.சண்முகசுந்தரம்,தா.பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் காஞ்சனா, தா.பேட்டை ஆசிரியர் பயிற்றுனர் சசிகுமார்,ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மு.தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தா.பேட்டை வட்டார செயலாளர் சே.விஜயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சேருகுடி ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியை இரா.விஜயலட்சுமி,
ஊரக்கரைகோகலே மான்ய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் க.லோகநாதன், பைத்தம்பாறை ஊ.ஒ.தொ.பள்ளி இடைநிலை ஆசிரியர் ந.மலர்விழி,மங்கலம்
கலைமகள் மான்ய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்
பி.இளங்கோவன் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற காருகுடி அரசு உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.தண்டபாணி ஆகியோருக்கு சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்ட செல்வி.செ.ர.தேவயாழினி (ஊ.ஒ.தொ.பபள்ளி காருகுடி),தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் -18 பேருக்கும் ,ஜெம்புநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் -3 பேருக்கும்,அயித்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் -2 பேருக்கும் பொன்னாடை அணிவித்து மெடல் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முப்பெரும் விழாவில் தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இராணி, செந்தில்செல்வி, செல்லமணி, இந்திரா, கலைச்செல்வி,செல்வி, ஜெயந்தி, லதா,மஞ்சுளா, கண்மணி, விஜி, சரஸ்வதி, பத்மாவதி, கண்ணகி, அருள்அல்லி, லதா, செல்வி, சித்ரா, துரைராஜ், சாந்தி, சக்திவேல்,கல்யாணி, கல்பனா, மஜுதா , இளவரசி , அமுதா, பொன்னி, சிந்துஜா , கலைச்செல்வி, இராமேஸ்வரி, மஞ்சுளா, பரிமளா தேவி, வித்யா லோகாம்பாள், தேவி, மணிமாறன், பிரபு, சுரேஷ்குமார், கனகராஜ் செல்லதுரை,மச்சகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்கள்
மு.சுப்ரமணி (தலைமை நிலைய செயலாளர்), ரா.அழகர்சாமி (மாவட்ட செய்தி தொடர்பாளர்) கவிதா (மாவட்ட மகளிரணி துணை தலைவி ),வே.ராஜா (மாநில செயற்குழு உறுப்பினர்),சங்கரராமன் (மாநில பொதுக்குழு), உறுப்பினர் இரா.ஈஸ்வரன்
(மாவட்ட துணை தலைவர்), க.பூபாலன் (மாவட்ட அமைப்பு செயலாளர்),ந.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணை தலைவர்),பொ.கருணாகரன்
(மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர்),சி.பாலகிருஷ்ணன் (மாவட்ட துணை தலைவர்),
சி.சுப்ரமணி (மாவட்ட துணை செயலாளர்), ச.இளம்பரிதி (மாவட்ட துணை செயலாளர்),
த.தியாகராஜன் (தாபேட்டை வட்டார பொருளாளர்), ரெ.பிரகாஷ் (துறையூர் வட்டார செயலாளர்) வெ.முருகராஜ் (துறையூர் வட்டார தலைவர்), ரா.ஞானசேகரன்
(துறையூர் வட்டார பொருளாளர்), மு.சந்திரசேகர் (வட்டார தலைவர் உப்பிலியபுரம்),
இ.நாகேந்திரன் (வட்டார செயலாளர், நகரம் ஒன்றியம்) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மேலும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்த மாநில தலைவர் கு தியாகராஜன் அவர்களுக்கு தா.பேட்டை வட்டாரம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது இதில் தா.பேட்டை ஒன்றிய வட்டார தலைவர் பெ.நல்லதம்பி நன்றியுரை ஆற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்