கரூர் செய்தியாளர் மரியான் பாபு


வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பாண்டிச்சேரி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.

பாண்டிச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய பாண்டிச்சேரி மதுபானங்களை கார் மூலம் கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா, IPS உத்தரவின்பேரில் கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய சரகம், சுக்காலியூர் காவல்துறை சோதனை சாவடியில் கரூர் மாவட்ட மதுவிலக்க அமலாக்க துறை காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தபோது கரூர் to சேலம் பை-பாஸ் சாலை வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சதீஸ்கண்ணன், வயது 38, த/பெ மோகன், எண். 57, அழகர்நாய்க்கன்பட்டி, தென்னம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் தாலூக்கா, திண்டுக்கல் மாவட்டம் (தற்சமயம்) நாய்க்கர் தெரு, பழைய சுக்காலியூர், கரூர் என்பவரை சோதனை செய்து அவரை விசாரித்தபோது அவர் கடந்த 02 நாட்களுக்கு முன்பு தனது Santro DX காரில் பாண்டிச்சேரியிலிருந்து பாண்டிச்சேரி மதுபானம் 750 ML அளவு கொண்ட 108 பாட்டில்களும், 375 ML அளவு கொண்ட 23 பாட்டில்களும், 180 ML அளவு கொண்ட 102 பாட்டில்களும் ஆக சுமார் ரூ. 51,900/- மதிப்புள்ள 233 மது பாட்டில்களை கடத்தி தனது வீட்டில் காரில் வைத்திருப்பதாக கூறியவரை அழைத்துச்சென்று அவரது வீட்டில் காரில் இருந்த மேற்படி மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கேரளா மாநில பதிவு எண் கொண்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் காவல் அடைப்பு பெற்று, கரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

வாகன தணிக்கையின்போது சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மதுவை கடத்தி வந்த நபரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா IPS வெகுவாக பாராட்டினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *