கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ந. கண்ணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கலந்து கொண்டு அவர் ஆசிரியர் பணிக்காலத்தில் சேவையாற்றியதை எடுத்துக் கூறி அவர் எழுதிய புத்தகத்தையும் வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மதிமுக மாவட்டச் செயலாளர் வி. எஸ் கே ராமகிருஷ்ணன் உள்பட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.