கோயமுத்தூர் எக்கனாமிக் சேம்பர் சோசியல் விங்க் சார்பாக சர்வதேச மே தின விழா
தையல் இயந்திரங்கள் வழங்கி பெண் தொழில் முனைவோர்கள் ஊக்குவிப்பு கோயமுத்தூர் எகனாமிக் சேம்பர் சோசியல் விங்க் சார்பாக நடைபெற்ற மே தின விழாவில் திரளான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…
கோயமுத்தூர் எகனாமிக் சேம்பர் சோசியல் விங்க் சார்பாக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது..
இந்நிலையில் இவ்வமைப்பின் சர்வதேச மே தின விழா உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..
சமூக நலப்பிரிவின் தலைவர் சமூக நீதி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில், எகானமிக் சேம்பர் சார்பாக சபீர் அகமது நூரூல் அமீன் முஸம்மில் முஸ்தபா மற்றும் சமூக கூட்டமைப்பு சார்பாக குரூஸ்மேரி கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் சமூக நீதி கூட்டமைப்பின் துணை தலைவர் உமர் கத்தாப் அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர்,பைத்துல் மால் நிறுவனர் எஸ் எம் ஹிதாயத்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வட்டி இல்லா கடன் திட்டமான பைத்துல் மால் திட்டத்தை துவக்கி வைத்தார்..
கவுரவ அழைப்பாளராக முஹம்மது கலீமுதீன் கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, அமைப்பு சாரா ஓய்வூதியம் பெறக்கூடிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
விழாவில் சிறுபான்மை நலத்துறை கண்காணிப்பாளர் சேகர் சமூக நீதி கூட்டமைப்பின் தலைவர் இராம வெங்கடேசன்,பொருளாளர் அருள்தாஸ், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ராஜா முகமது, ஷீபா ஜோசப்,ஆறுச்சாமி, முகமது ஹனிபா ஆகியோர் திட்டங்களின் நோக்க உரை குறித்து ஆற்றினர்..
விழாவில் பேசிய டாக்டர் ஜி முகமது ரஃபிக் உக்கடம் தாஜ் டவர் சமூக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் மூலமாக சமூக முன்னேற்றத்திற்காக 14க்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர்,சுமார் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தில் நலத்திட்ட உதவிகளும் திறன் மேம்பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவதாக கூறிய அவர், இதன் தொடர்ச்சியாக சர்வதேச மே தின விழாவில் தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரமும் நலத்திட்ட உதவிகளும் 130 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது, உள்ள படியே மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்..