காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றதையொட்டி உற்சவர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருத்தேர் விழாவினை யொட்டி பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர் வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனைகள் காட்டப்பட்டு, திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
பின்னர் இளையனார்வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் “அரோகரா,அரோகரா” என பக்தி பரவச கோஷங்களுடன் திருதேரை வடம் பிடித்து இழுத்து வழி பட்டு முருக பெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
திருத்தேர் விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சிமன்ற தலைவர் கோ.கமலக்கண்ணன்,கோவில் செயல் அலுவலர் கதிரவன், திருத்தேர் உபயதாரர் தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் அறங்காவலர் குழுத் தலைவர் கோதண்டராமன் மற்றும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.