செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் திருஞானசம்பந்தரால் பாடல்
பெற்று விளங்கக்கூடிய புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில்
வழிபாடு செய்தனர். ஜப்பான் இந்திய தொழிலதிபர் கோபால்பிள்ளை சுப்ரமணியன் வழிகாட்டுதலில் ஜப்பானிலிருந்து சிவனடியார் பால கும்ப குருமுனி தலைமையில் 20 பேர் கொண்ட குழு அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.
மேலும் வெளிநாட்டவர்கள் நமது பண்பாடு மற்றும் பக்தி சித்தாந்தங்களை மிகவும் ஈடுபாட்டுடன் செய்வதை பார்க்கும் போது அப்பகுதி பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.