செய்தியாளர் பார்த்தசாரதி
விழுப்புரம் மாவட்டம் நவமால்காப்பேர் மதுரா மும்மொழி நாயகன் குப்பத்தில் ஶ்ரீ துரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்கினி வசந்த 29 வது திருவிழா 10 நாள் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஐந்தாம் மாதம் முதல் தேதியில் கொடியேற்றுடன் தொடங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்று மாலை மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் கிராம மக்களுக்கு காட்சி அளித்தார்
இதனைத் தொடர்ந்து இன்று 9 தேதி காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும் இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான வரும் 9 தேதி மாலை தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 11 தேதி காலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் பட்டாபிஷேகம் நடைபெற்று மற்றும் திருவிழா இனிதே நிறைவடையும் இதில் ஊர் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு திருவிழாவினை இனிதே நிறைவு செய்வார்கள்