தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கத்தில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் துளசிஅய்யா, கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இப்பேரணி சூலமங்கலம் பெட்ரோல் பங்க் ல் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக. சாலை விழிப்புணர்வு வாசகம் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

இதில் கல்லூரி பேராசிரியர் முருகவேனி, எழிலரசி, இலக்கியா, ரூபிலா, வித்யா,சரண்யா, குணேஷ்வரி, ஜமிர்பாட்சா,மணிவண்ணன் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *