காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து பிளஸ் டூ பயிலும் மாணவர்கள் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில்,இவ் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய இப்பள்ளியைச்சேர்ந்த 268மாணவர்கள்,149 மாணவிகள் என மொத்தம் 417 மாணவர்களும் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பாக இப்பள்ளி மாணவர்கள் வேலரசு,ஜஸ்வந்தன் ஆகிய இருவர் 591 மதிப்பெண்களை பெற்று,பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர்.மேலும் 150 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்து,பள்ளி தாளாரர் அருண்குமாரிடம் தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்து பகிர்ந்து வாழ்த்து பெற்ற நிலையில்,மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி தாளாரின் காலில் விழுந்து ஆசிப்பெற்றும்,அவரை கட்டி அனைத்து முத்தமிட்டும் பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.
பள்ளி மாணவர்களின் இந்த செயல் பள்ளி தாளாரர் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.