அகத்தாரிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா
கமுதி,இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகேயுள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் வேப்பமரத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது.
இப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.
பின்னர் நேற்று முன்தினம் கோவில் முன்பு ஏராளமான பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இரவு சக்தி கரகத்துடன் முளைப் பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் முன்பு வைத்தனர்.நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக
கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை சுற்றிலும்
ஏராளமான பெண்கள் பக்தி பாடல் பாடி கும்மியடித்து வழிபட்டனர்.
பின்னர் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வழியாக சென்று ஊரணியில் கரைத்தனர்.
பின்னர் கோவில் முன்பு நடைபெற்ற பூஜையில், அனைவரும் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மற்றும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் சென்னை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இக்கிராமத்தை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாதவ சமுதாயத்தினர் செய்திருந்தனர்.