தேனி மாவட்டம் கம்பம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேனி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி ஒன்றிய நகரம் பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மகளிர் பாக முகவர்கள் ஆலோசனை மற்றும் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் பேசுகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- பெறுகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

புதுமைப் பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.மற்றும் மக்களை தேடி மருத்துவம் ,நான் முதல்வன் திட்டத்தில் பொறியியல், கலை (ம) அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்

இந்த நிகழ்வில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தமிழ் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெப்ரின் ஜியோன், ஹெலன் டேவிட்சன்,கம்பம் வடக்கு நகர கழக செயலாளர் வீரபாண்டி,தெற்கு நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி ராஜா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரா பாண்டியன், Ex எம்பி செல்வேந்திரன், மகளிர் அணி,நாமக்கல் இராணி செயலாளர் மாநில மகளிர் தொண்டர் அணி மற்றும் ஒன்றிய கழக மகளிர் அணி அமைப்பாளர்கள் ஒன்றிய கழக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் பேரூர் கழக மகன் மகளிர் அணி அமைப்பாளர்கள் பேரூர் கழக மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ஒன்றிய கழக செயலாளர் நகர கழக செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேனி தெற்கு மாவட்ட சார்பாக மகளிர் அணி கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *