கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை புரிந்துள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் V.தனஸ்ரீ – 593, S.தாரணி – 591, K.ஜெயஸ்ரீ – 591, G.G.பிரணவ் ஸ்ரீநிதி – 589 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் D.கார்த்தீபன் நான்கு பாடங்களில் 100/100 மதிப்பெண்களும், அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங் கட் ஆஃப் 200/200 பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 76 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 177 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் 19 மாணவர்களும், கணிதத்தில் 4 மாணவர்களும், இயற்பியலில் 1 மாணவரும், வேதியியலில் 3 மாணவர்களும், கணினி பயன்பாட்டுயியலில் 3 மாணவர்களும், கணக்குப்பதிவியியலில் 7 மாணவர்களும், வணிகவியலில் 3 மாணவர்களும், பொருளியலில் 4 மாணவர்களும், ஆங்கிலத்தில் 1 மாணவரும் மொத்தம் 45 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் 235 மாணவர்கள் வெற்றி பெற்று ஆண்டுக்கு ரூ.36,000/- வீதம் மொத்தமாக ரூ.84 லட்சத்து 60 ஆயிரம் பரிசுத் தொகை வென்றுள்ளனர். பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு நீட், ஜே.இ.இ சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.
செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணிபார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், முதல்வர் K.சேகர், துணை முதல்வர் G.நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர்கள் V.பானுப்பிரியா, A.கணேசன், இருபால் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.