குடவாசல் அருகே 48 வருடங்களுக்கு பிறகு எல்லையை சுற்றி வந்த ஸ்ரீ பிடாரி அம்மன்… வீட்டுக்கு வீடு அர்ச்சனை செய்து வழிபாடு..”


திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ அரியநாயகி எனும் பிடாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா நடைபெற்றது.


கடந்த சித்திரை மாதம் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் செய்து துவங்கியது. இவ்விழா சித்திரை 24-ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் சக்தி கரகம் பிரகார வலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.


அதனை தொடர்ந்து சித்திரை மாதம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ அரியநாயகி எனும் பிடாரியம்மன் சுமார் 48 வருடங்களுக்கு பிறகு புறப்பட்டு அரசவனங்காடு கிராம எல்லைகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து துவாஜரோகணும் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


சித்திரை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் புறப்பட்டு மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க வான வேடிக்கையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


அங்கிருந்து புறப்பட்டு அக்ரஹாரம், பெரியகுளம், ஓடக்கரை, தோப்பு தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு வீதிகளை கடந்து இரவு ஆலயத்தை வந்து அடைந்தது, அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் தேர் பவனி வடக்கு தெரு, மேல தெரு, மெயின் ரோடு, கீழத்தெரு ஆகிய பகுதிகளை கடந்து இரவு ஆலயத்தை வந்தடையும்..
தொடர்ந்து சித்திரை மாதம் 28-ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு சக்தி கரகம் புறப்பட்டு வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் 30- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணிக்கு பக்தக்கோடிகள் கலந்து கொள்ளும் மாபெரும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு பக்தர் காட்சியும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாட்டினை அரசவணங்காடு கிராமவாசிகள் மற்றும் பக்த கோடிகள் ஏற்பாட்டில் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *