தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
அதன் பின்பு கோவில் வளாகத்தின் பின்புறம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது மாநகராட்சி மேயர் ஜெகன் அன்னதானத்தை துவக்கி வைத்தார் சுமார் 5000 பொதுமக்கள் அன்னதானத்தில் உணவு அருந்தினர்
அதன் பின்பு கோவிலுக்கு சென்ற மாநகராட்சி மேயர் ஜெகன் அங்கு சாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்