செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாதவரம் பகுதியில் இயங்கி வரும் ஃ பின்சி லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன
இதில் ஆவடி திருநின்றவூர் திருவள்ளூர் மாதவரம் என நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் குழந்தைகளுக்கான நடை பயிற்சி கருவிகள் வாக்கர்ஸ் ஊன்றுகோல் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக நிறுவன அதிகாரி பி வம்.சி ரெட்டி வழங்கினார்
மேலும் சென்னையில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்கள் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்களுக்கு அந்த நிறுவன 10 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கி வருவதாக கூறப்படுகின்றன
இதில் கொரோனா தொற்று காலத்தில் ஆரம்பித்த நாள் முதல் பொதுமக்களுக்கு சாலை ஓரம் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தருவதாக தெரிவித்தனர்
இதில் ஊனமுற்றோர் ஒருவர் தங்களுக்கு எங்கு சென்றாலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வழங்கப்பட்டு வருகின்றன எங்களுக்கு வெளியே எங்கும் செல்ல முடியாத காரணத்தினால் தங்களை சுற்றுலா பயணம் கொண்டு செல்ல முடியுமா என வேதனையோடு கேட்டுக் கொண்டனர் .
அப்பொழுது அந்த நிறுவனத் தலைவர் கட்டாயம் அழைத்துச் செல்வோம் என அவர்களுக்கு ஊக்குவித்தார் .அதன் அடிப்படையில் கலந்து கொண்ட ஊனமுற்றோர்கள் முதியோர்கள் என சிலர் மகிழ்ச்சி அடைந்தனர்