பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் : உலகெங்கும் பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றும் செவிலியர்களின் சேவையை போற்றும் வகையில், மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், “தோழமை, அரவணைப்பு மற்றும் மனிதநேய சேவை” என்பவற்றுக்குச் சின்னமாகக் கருதப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, பரப்ரஹ்மம் நிறுவனத்தின் மாநில பொதுச்செயலாளர் த.ப. முத்துக்குமரன், ஒரு செய்திக்குறிப்பில் கூறியதாவது: “மனிதனுக்கு வாழ்க்கை மிக முக்கியமானது. அந்த வாழ்க்கையை காக்கும் பணியில்வ செவிலியர்கள் ஆற்றும் பணி வரையறுக்க முடியாதது. அவர்கள் பகல்-இரவை விட்டு நோயாளிகளின் நலனுக்காக அர்ப்பணித்து செயல்படுகிறார்கள்.
அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் தினம் இது. உலகெங்கும் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
செவிலியர் தினத்தன்று, அரசும், தனியாரும் இணைந்து அவர்களின் சேவையை பாராட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நாளின் மூலம், செவிலியர்களின் சமூக பங்களிப்பு பெரிதாக அறியப்படும் வகையில், விழிப்புணர்வும் ஏற்படுகிறது என்றார்