மேலநடுவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திறந்து வைத்தார்
துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மேலநடுவலூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் தமிழ் நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அப்பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததற்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமாருக்கு நன்றி தெரிவித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்தின்,மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்,கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், சேர்மன் சரண்யா மோகன்தாஸ், அரசு அலுவலர் ரோகித் மற்றும் ஊராட்சி செயலர் சந்திரசேகர்,கழக பொருளாளர் நடுவலூர் மளிகை கடை ஜெயராமன் , ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நடுவலூர் செல்வகுமார், சந்திரசேகர்,கணேசன்,சரவணன்,லோகேந்திரன், ஆசைத்தம்பி,குமார் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்