நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ஏற்கனவே ஒரு அரசு மதுபான கடை செயல்ப்பட்டு வருகிறது அந்த கடையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் மீண்டும் ஒரு மதுபான கடை திறக்க உள்ளது
அதனை எதிர்த்து வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் o.s மணியன் தலைமையில் வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.