திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனம் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம், புன்னியாகவாதினம், கோ பூஜை, கலச பூஜை, யாக வழிபாடு, அபிஷேக ஆராதனை, பகல் 12- மணிக்கு கஜ பூஜை, தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

மதியம் 1- மணிக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6- மணிக்கு புதுசேனியர் தெரு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் பஜனை குழுவினரின் ஸ்ரீ ராம்நாத் சங்கீர்த்தனம் நடைபெற்றது. இரவு 7- மணிக்கு தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை சிவ ஆகம ரத்தினம் சிவஸ்ரீ விசலூர் எஸ். கங்காதர சிவாச்சாரியார் சிறப்பாக செய்து இருந்தார்.
விழா ஏற்பாடுகளை வலங்கைமான் சேனியர் தெரு ஸ்ரீ ராமபவனம் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி அறக்கட்டளை மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.