துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் திமுக சார்பில் டாக்டர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வன், அர.ந.அசோகன் தலைமையில்உப்பிலியபுரம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ்,பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன், அறிவொளி சுப்பிரமணியன், தமிழ் நாடு உணவு ஆணையம் உறுப்பினர் கணேசன்,முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிறுநாவலூர் சுப்பிரமணியன்,லதா தனபால்,ராஜா மரியதாஸ், வரதராஜ், மு.ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர், வைரி மணிகண்டன், ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மணிவண்ணன், தீனா,தனபால் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்