அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்களின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு மணமக்களை வாழ்த்தி விட்டு தக்கோலம் வழியாக சென்னை திரும்பினார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த வைணவ மகான் ஸ்ரீராமானுஜர் புகைப்படத்தையும் போந்தூர் செந்தில்ராஜன் வழங்கினார் அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் சிவக்குமார், முனுசாமி ராஜேஷ், வெங்கடேசன் , பாலமுருகன், திருமால், சார்லஸ், ஆகியோர் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர்
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்