மழலையர் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறப்பு
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலை குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு கடந்த கடந்த இரண்டாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரம்பக் கல்வி பயிலும் மழலையர் குழந்தைகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது இந்நிலையில் கோவை கவுண்டர் மில் பகுதியில் வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மழலை குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த்து..
வாழ்வை மாற்றும் கல்வியை பயில வாழ்நாளின் முதல் நாள் பள்ளிக்கு வருகை தரும் மழலை குழந்தைகளை வரவேற்க பள்ளி முன்பாக வண்ண பலூன் தோரணங்கள் கட்டப்பட்டு,மிக்கி மவுஸ்,டெடி பியர் போன்ற பொம்மைகள் கைகளை குலுக்கி வரவேற்று குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் ரோஜா பூக்களை வழங்கி மகிழ்வித்தனர்..
இது குறித்து பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம்,அறங்காவலர் கேதரின் ஹெரால்டு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், முதல் முறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சிறிது பயம் இருந்தாலும் அதனை போக்குவதற்கு இது போன்ற முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்தனர்..
குறிப்பாக எங்களது பள்ளியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதால் குழந்தைகள் எளிதில் பள்ளியில் பாடங்களை கற்று கொள்ள துவங்கி விடுவதாக தெரிவித்தனர்…