தாராபுரம்: தாராபுரம் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மதுரை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்தை கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

தாக்கப்பட்ட நடத்துனர் கணேசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் காளிபாளையத்தைச் சேர்ந்த கணேசன் வயது 50 சிராம் பாளையத்தைச் சேர்ந்த நடத்துனராக இருந்தவர் அருள் பிரகாஷ் 34. இவர்கள் இருவரும் கோவை கோட்ட அரசு பேருந்தில் சிறப்பு பேருந்து கிளை ஓட்டுநராக வண்டி எண்
Tn 39.n.0297 என்ற பேருந்தை திருப்பூரிலிருந்து மதுரைக்கு இயக்கி வந்தனர் நேற்று இரவு 12 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அப்பொழுது மதுரை கோட்டை உதவி மேலாளர் மாரிமுத்து .

சிறப்பு பேருந்து ஓட்டுநரை பார்த்து இன்னும் நேரம் இருக்கிறது ஏன் பயணிகளை பேருந்தில் ஏற்றினீர்கள். மேலும் வெளியில் நின்றும் பயணிகளை ஏற்றினால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பாதிப்படைவார்கள் என கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வேறு எதுவும் இல்லை அதன் காரணமாக மதுரை டு திருப்பூர் செல்வதற்காக பயணிகளை ஏற்றினேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உதவி கோட்ட மேலாளர் மாரிமுத்து. ஓட்டுனரை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு மாரிமுத்து அணிந்திருந்த காலனியை கழட்டி கணேசை சரமாரியாக தாக்கியுள்ளார் ஏண்டா பயலே நாங்க சொன்னா உங்களுக்கு புரியாதா எப்பவுமே கோயம்புத்தூர் காரங்க இப்படித்தான் குசும்பு பண்ணுவீங்களா டா கரெக்டான நேரத்தில் வந்து போகணும். என கை கால்களை திருப்பியும் முகத்தில் அறைந்தும் தரதரவென இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேருந்தில் இருந்த 70 பயணிகளை கீழே இறக்கி விட்டு அட்டூழியத்தில் மதுரை கோட்ட உதவி, மேலாளர் மாரிமுத்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அடி காயங்களுடன் நடத்துனர் கணேஷ் மதுரையில் இருந்து பேருந்தை இயக்கி தாராபுரத்திற்கு காலை வந்தடைந்தார் அப்பொழுது மேலாளர் அடித்த செருப்படியால் இவருக்கு கை கால்களில் லேசான முறிவு ஏற்பட்டு தாராபுரம் பணிமனையில் மயங்கி விழுந்தார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சக ஊழியர்கள் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் கை, கால்களில் பலமான அடி ஏற்பட்டுள்ளதாகவும் தலையில் லேசான உள் காயம் உள்ளதாலும் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் என உள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஆளும் திமுக ஆட்சியில் அரசு ஓட்டுநர் நடத்தினருக்கு உயிருக்கு பாதுகாப்பில்லை என தாராபுரம் அரசு நடத்துனர் ஓட்டுநர்கள் பணிமனை முன்பு மாரிமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி:திரு,கணேசன்
பாதிக்கப்பட்ட ஓட்டுனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *