புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வை முன்னிட்டு வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் கடைவீதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மற்றும் அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முகமது தாரிக் வழிகாட்டுதலின் படியும், வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அரித்து வார மங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்கள் ஆய்வு செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் கோபு மற்றும் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரித்து வார மங்கலம் காவல் துறையினர் மற்றும் அரித்து வார மங்கலம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.