திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழா பழனி உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஜூன் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வைகாசி விசாக திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.
முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருத்தேரில் எழுந்தருளினர். அதன்பிறகு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த தேரோட்டம் பழனி கிழக்கு ரதவீதியில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து, நிலையை அடைந்தது. தேரோட்டத்தின்போது பக்தர்கள் பழனி மலை முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர்