திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்திய போது அவ்வழியே கற்களை ஏற்றி வந்த 2 டிராக்டர்களை நிறுத்தினர். டிரைவர்கள் உடனடியாக இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையில் அரசு இடத்தில் அனுமதியின்றி பாறைக்கற்கள் வெட்டி எடுத்தது தெரிந்தது.

உடனடியாக 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த வெங்கடாஜலம், பாலமுருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *