திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக் குளத்தில் தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.
தெப்பத்தினுள் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட தேரில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் வீற்றிருக்க, தெப்பத்தின் வெளிப்புறம் இருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவைக் கண்டு ரசித்தனர்