அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள
சமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் குமரேசன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் அலெக்ஸ், தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமர், பாண்டியன், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ், புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், மாவட்ட பொருளாளர் மூக்கம்மாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மணிமேகலை, மாவட்ட பொருளாளர் மீனாட்சி, இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் மெய்யர், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆதனூர் குமரேசன், அவர்களுக்கு தமிழ் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.. இந்த மாநாட்டில் பாலமேடு பகுதி விவசாயிகள் நலன் கருதி சாத்தையார் அணையில் முல்லை பெரியார் பாசன கால்வாய் நீரை இணைத்திட வேண்டும்,
அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றிட வேண்டும், முடுவார்பட்டி பகுதியில் பழங்களை பதப்படுத்தும் தொழிற்ச்சாலை அமைத்திட வேண்டும் அலங்கை ஒன்றியத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் அலங்காநல்லூர் பாலமேடு காவல் நிலையங்களில் காவலர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் ஏஐடியுசி செயலாளர் பாலகிருஷ்ணன், நன்றி கூறினார்..