கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் கரூர் மாவட்டம் பொன்னனியாறு அணையில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் படகு (சவாரி)குழாமை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப. மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம்,பொன்னனியாறு அணையில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் (சவாரி)குழாமை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி ஆகியோர் படகில் சவாரி செய்தனர்.

பின்னர் இத்திட்டம் பொன்னனியாறு அணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய உணவகமும், படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக 2 படகுகளும் இயக்கப்படுகிறது.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை செயல்படுத்தியதைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் படகு (சவாரி)குழாம் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அறநிலையங்கள் அலுவலகர்கள்,அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *