தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1500 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர் இதனை அடுத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மேயர் ஜெகன் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். காலையிலிருந்து தூய்மை பணியாளர்கள் அலுவலகம் முன்பு வெயிலில் இருந்து வருவதாக மேயர் ஜெகனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெயிலில் தூய்மை பணியாளர்கள் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தனது அறையிலிருந்து வெளியே வந்து காத்திருந்த தூய்மை பணியாளர்களிடம் விபரங்களைக் கேட்டிருந்தார் மேயர் ஜெகன் உடனடியாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் அவர் லேண்ட் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் நீங்கள் எதிர்பார்த்த தீபாவளி போனஸ் 2500 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அவர் எல்லாம் இந்த நிறுவனம் ஏதாவது பிரச்சனை செய்தால் உங்களுடன் தான் நான் இருக்கிறேன் என்னிடம் நீங்கள் முறையிடலாம் உங்களை நான் வந்து சந்திப்பேன் என்று தூய்மை பணியாளர்களிடம் மேயர் ஜெகன் கூறினார் இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் மேயர் ஜெகன் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர் ஆணையரை சந்தித்து தீபாவளி போனஸ் கேட்டு வந்த தூய்மை பணியாளர்களுக்கு மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்களின் நேரில் சந்தித்து அவர்களுடைய தீபாவளி போனசை வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.