தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர், தொப்பூர் மலை கணவாய் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நிகழாதிருக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, துணை காவல் கண்காணிப்பாளர் (தருமபுரி) சிவராமன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் அ.க.தரணீதர், திலிப் பில்ட்கான் குழுவினர், மேலாளர் (தொழில்நுட்பம்), மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்